பதிவு செய்த நாள்
10
செப்
2013
10:09
மதுரை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 280 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி, 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பல்வேறு இடங்களில் கரைக்கப்பட உள்ளன. சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிக்க, தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரச்னைக்குரிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, ஊர்வலத்தை வீடியோக்களில் பதிவு செய்வர். இளைஞர்கள் மது அருந்திவிட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது. அனுமதியின்றி கூட்டம், ஊர்வலம் அல்லது கும்பலாகச் சென்று வேறு செயல்களில் ஈடுபட்டால், அது சட்டவிரோதம். கூட்டத்தில் ஒருவர் குற்றம் செய்தாலும், அவருடன் உள்ள அனைவரும் குற்றம் செய்ததாக கருதப்படும். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் ஜாதி பிரச்னையை தூண்டும் வகையிலோ, எந்த ஒரு தனிநபர், இனத்தையோ பேச்சு, செயல், பிளக்ஸ் பேனர்கள் மூலம் புண்படுத்தினால், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என, மாவட்ட எஸ்.பி.,பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.