Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லாரும் அவர் சொந்தம்! கருவுற்ற பெண்கள் எந்த ஸ்லோகம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணனை நினைக்காத நாளில்லையே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
12:09

*அவசரயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு ஆண்டாள் காட்டிய உயர்ந்த வழி சரணாகதி. அதாவது, இறைவனைச் சரணடைவது. இதை விட சிறந்த மார்க்கம் உலகில் வேறில்லை என்று திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
*சுவாமிதேசிகன், கோதாஸ்துதியில் ஆண்டாளை விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந: விசேஷமாகப் போற்றுகிறார். விஷ்ணு சித்தரின் மகளான ஆண்டாள் என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
*ஆண்டாள் மார்கழி நோன்பை நோற்று கண்ணனை அடைந்தாள். மார்கழியை மார்கசீர்ஷம் என்று குறிப்பிடுவர். தலைசிறந்த வழி என்பது இதன் பொருள். கடவுளை அடைவதற்குரிய வழிகளில் ஆண்டாள் காட்டிய பாவை நோன்பு மிகவும் சிறந்தது.
*திருமாலின் திருவடியில் பூக்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ஆத்மாவை அவன் திருவடியில் சமர்ப்பிக்க வேண்டும். வாய், அவனுடைய திருநாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த மூன்றுவழிகளையும் பின்பற்றி உயிர்கள் மோட்சகதி பெற வேண்டும் என்பதே கோதை காட்டிய நெறிமுறை.
*கோதை என்பதற்கு நல்ல வாக்கு அருள்பவள் என்பது பொருள். அவளுடைய திவ்யமான திருவடிகளை எப்போதும் மனதில் சிந்திப்பவர்க்கு நல்வாக்கை கொடுத்து அருள்வாள். மங்கலமான சுபசொற்களை நாவால் பேச அனுக்ரஹம் செய்வாள்.
*கோதை திருமாலை மணக்கும் பேறு பெற்றவள். இரு மாலைகளைக் கட்டி தினமும் திருமாலுக்குச் சூட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. பூமாலையைச் சூடியும், பாமாலையைப் பாடியும் அவன் திருவடிகளில் சமர்ப்பித்தாள். அதனால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்னும் பெயர் பெற்றாள்.
*கண்ணனிடம் தன் காதலை வெளிப்படுத்த ஆண்டாள் பூக்களை தூதாக அனுப்பினாள். என்னுடைய ஆசையை எம்பெருமானிடம் தெரிவித்து அவன் அருளை எனக்கு பெற்றுத் தாருங்கள் என்று சொல்லி அனுப்பினாள். இதன்மூலம் ஆண்டாள் கண்ணனையும் ஆண்டாள், நம்மையும் ஆள்கிறாள்.
*அஞ்சுக்குடிக்கொரு சந்ததியாய் என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் ஆண்டாளை சிறப்பிக்கிறார். பன்னிரு  ஆழ்வார்களின் கோஷ்டிக்கு, ஆண்டாள பூங்கொடியாக விளங்குவதால், அவளின் அவதாரம் உயர்ந்ததாக போற்றப்படுகிறது.

-முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar