காசியில் தண்டம்.. கயாவில் பிண்டம் என்பதன் பொருள் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2013 12:09
காசியில் துண்டி விநாயகர், விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி, காலபைரவர் போன்ற தெய்வங்களைத் தரிசித்து விட்டு தண்டபாணி மந்திர் என்ற முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு நாம் செய்த பாவங்களுக்கு தண்டனை கொடுத்து, நம்மைப் புனிதர்களாக ஆக்கும் முறையில் ஒரு கோலால் நம் முதுகில் மூன்று முறை தட்டுவார்கள். தண்டித்தல் என்பதன் சுருக்கம் தண்டம். இதே போல காலபைரவர் கோயிலிலும் முதுகில் தடடுவார்கள். கயையில் முன்னோருக்கு பித்ரு சிராத்தம் முதலியன செய்து பிண்டம் வைப்பது வழக்கம். காசியில் தண்டம், கயாவில் பிண்டம் என்பதற்கு மேற்கண்ட இரண்டும் காரணங்களாகும்.