பதிவு செய்த நாள்
11
செப்
2013
10:09
திருப்பூர்: விநாயகர் சதுர்த்தி மற்றும் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, இந்து அன்னையர் முன்னணி சார்பில், திருப்பூரில் 108 தீர்த்த கலச ஊர்வலம் நேற்று நடந்தது.அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தம் நிரப்பிய 108 கலசங்கள், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவிலில் நேற்று அலங்கரிக்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு, இந்து முன்னணி மாநில அமைப்பாளர் முருகானந்தம், பொது செயலாளர் சுப்ரமணியம் ஆகியோர், கலச ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.காவிக்கொடி அணிவகுப்புடன், இறைவன் வேடமிட்ட குழந்தைகள், 108 தீர்த்த கலசங்கள், 108 விநாயகர் சிலைகள், 108 மாவிளக்குகளுடன், பெண்கள் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில், வேங்கை வாகனத்தில் அமர்ந்த சாமுண்டீஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது. ஈஸ்வரன் கோவிலில் துவங்கி, ஈஸ்வரன் கோவில் வீதி, பூ மார்க்கெட், காமராஜர் ரோடு, தாராபுரம் ரோடு வழியாக, கோட்டை மாரியம்மன் கோவிலை, ஊர்வலம் சென்றடைந்தது. அலகுமலை ஸ்ரீதபோவனம் சேவாஸ்ரம நிறுவனர், குஹப்ரியானந்த சரஸ்வதி ஆசியுரை வழங்கினார்.