மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான குடியிருப்பு, தெற்குமாசிவீதி பாப்பான் கிணற்று சந்தில் உள்ளது. இதை, 20 ஆண்டுகளாக கலாவதி என்பவர், ஆக்கிரமித்திருந்தார். நேற்று, அறநிலையத்துறை உதவிகமிஷனர் கருணாநிதி முன்னிலையில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, கோயில் வசம் மீண்டும் கொண்டுவரப்பட்டதாக, நிர்வாக அதிகாரி ஜெயராமன் தெரிவித்தார்.