சோழவந்தான்: சோழவந்தான் அக்ரஹாரம் சந்தானகோபாலகிருஷ்ணன் கோயிலில் ராதாகிருஷ்ணன் திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ண பக்த சபா சார்பில் நேற்று முன்தினம் அஷ்ட நாம நாராயண பூஜை நடந்தது. சீனிவாச பாகவதர், ராமநாராயண பாகவதர் குழுவின் இன்னிசை கச்சேரி நடந்தது. நேற்று காலை மகளிர் குழுவினர், திருமண சீர்வரிசைகளுடன் ஊர்வலமாக மண்டபத்திற்கு வந்தனர். அங்கு வரதராஜபண்டிட் குழுவினரால் வேதம் முழங்க ராதாகிருஷ்ண சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.