காளையார்கோவில்: காளையார்கோவில் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று காலை செட்டியூரணி சித்திவிநாயகர் கோயில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது. சிலை ஊர்வலத்தை அகிலபாரத முருக பக்த பேரவை மாநில துணைத்தலைவர் சண்முகம் துவக்கி வைத்தார். விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டது. இந்து முன்னணி மாவட்டதலைவர் ஆறுமுகம்,செயலாளர் செல்வக்குமார், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ரத்தினசபாபதி, பா.ஜ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, ஒன்றிய தலைவர் வெண்மணி, செயலாளர் செந்தில், நகரச்செயலாளர் அயோத்தி பங்கேற்றனர்.