புதுச்சேரி: சாரம் அவ்வைத் திடலில் நேற்று நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.சாரம் அவ்வைத் திடலில் பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நடந்த இரண்டாம் நாள் விழாவில் சிறப்பு பூஜை மற்றும் பஜன் நடந்தது.இரவு 7:00 மணிக்கு பாண்டவ தூதன் சங்கீத சபா சார்பில் நாம சங்கீர்த்தனம் நடந்தது.நிகழ்ச்சியில் முருகன் ஸ்டீல் ஹவுஸ் மாரிமுத்து தலைமை தாங்கினார். சுவாமிநாதன், விநாயகர் சதுர்த்தி பேரவை பொதுச்செயலாளர் சனில்குமார், நிர்வாகிகள் ராஜசேகர், வைத்தியநாதன், செந்தில்முருகன், வீரப்பன் முன்னிலை வகித்தனர்.இந்து முன்னிணி மாநில பேச்சாளர் ரகுராமானுஜதாசன் சிறப்புரையாற்றினார். இரவு 8:00 மணிக்கு புதுச்சேரி சம்ஸ்கார் பாரதி சார்பில், பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.சண்முகபிரியா, பிரியதர்ஷினி, இன்னிசைவேந்தன் ஆகியோர் பாடினர். பிரவின் மிருதங்கம், விஸ்வேஸ்வரன் அறுமுகனம் வாசித்தனர்.