பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
சேலம்: சேலத்தில், விவேகானந்தர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பாரத விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது. விவேகானந்தரின், 150வது பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் பங்கேற்ற, பாரத விழிப்புணர்வு ஓட்டம் நடந்தது. நேற்று, சேலம் ஆனந்தாஸ்ரமம், வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளி அருகே, பாரத விழிப்புணர்வு ஓட்டம் துவங்கியது. சேலம் ராமகிருஷ்ணா மடம் செயலாளர் யதாத்மானந்தர் துவக்கி வைத்தார். பெரியார் பல்கலை சுவாமி விவேகானந்தர் கல்வி மைய ஆலோசனை குழு உறுப்பினர் குமாரசாமி, அமிர்தானந்தமாயி தேவி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு ஓட்டம், மூன்று ரோடு வழியாக துவங்கி, ஐந்து ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், நான்கு ரோடு வழியாக அண்ணா பூங்காவை சென்றடைந்தது. 20 கல்லூரிகளை சேர்ந்த 1,050 மாணவ, மாணவியர், பொதுமக்கள், விவேகானந்தர் பேரவை மற்றும் மன்றத்தை சேர்ந்த இளைஞர்கள் என, 3,000க்கும் மேற்பட்டோர், விழா கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கேசவராஜ் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.