Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அவருக்கு அப்படி இவருக்கு இப்படி! மீண்டும் ஒரு குரு÷க்ஷத்திரம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மாற்ற முடிந்ததை மாற்று..!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2013
04:09

*ஒவ்வொரு கணப்பொழுதாக வாழ்வு மலர்கிறது. கடந்தகாலம், எதிர்காலம் பற்றி கவலையில்லாமல், வாழ்வின் சாரமாக இருக்கும் நிகழ்காலத்தில் ஈடுபாட்டோடு வாழும் தான் வாழ்வு அர்த்தமுள்ளதாகிறது.
*நான் சுதந்திரமாக இல்லையே என்று ஒருபோதும் வருந்த வேண்டாம். எதிர்மறையான எண்ணங்களுக்கு மனதில் இடம் கொடுக்கக் கூடாது.
*உண்மையை ஒத்துக் கொள்ளாமல் அதை மறைக்க முயல்கிறோம். இதுவே நம்முடைய பிரச்னைகளுக்கு மூல காரணம். மாற்ற முடிந்ததை மாற்றவும், மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளவும் கற்றுக் கொண்டால் வாழ்வில் பிரச்னை குறைந்து விடும்.
*வாழ்வில் எந்த செயலில் ஈடுபட்டாலும், இன்பதுன்பம் கலந்தே இருக்கும். தனித்த இன்பமோ, தனித்த துன்பமோ பெற மனிதனால் ஒருபோதும் முடியாது.
*மனிதன் நீண்டஆயுள், சுகம், அறிவு இந்த மூன்றையும் வாழ்வில் தேட வேண்டியிருக்கிறது. இவற்றை அடிப்படை விருப்பம் என்றே சொல்லலாம்.
*சுகதுக்கங்களை அனுபவிக்கும் போது மனிதன் தன்னை நான் சுகவாசி நான் சிரமப்படுவதற் கென்றே பிறந்தவன் என்று சொல்லிக் கொள்கிறான். சுகமோ, துக்கமோ மனிதனைப் பாதிப்பதில்லை. மனதில் எழும் எண்ணங்களே மனிதனைப் பெரிதும் பாதிக்கின்றன.
*பிறர் என்னைப் புகழ வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.அதனால் ஏமாற்றமே உண்டாகும். பிறர் எனக்கு அதிக மதிப்புமரியாதை தரவேண்டும் என்று அதிகாரத்தோடு கேட்பதும் தவறு.
*செடியில் மலரும் பூக்கள் பிறர் புகழ வேண்டும் என்பதற்காக மலர்வதில்லை. செடிகளின் இயல்பு பூப்பூப்பது. அதுபோல, பிறர் நன்மைக்காக உங்களின் திறமைகளைப் பயன்படுத்துங்கள்.
*புகழ்ச்சியும், இகழ்ச்சியும் மன பாதிப்பை உண்டாக்கக் கூடாது. நம் செயலில் காட்டும்திறமையால் புகழ் தானாக தேடி வரவேண்டுமே ஒழிய, நாம் தேடிஅலையக் கூடாது.
*இறைவன் கொடுத்த நல்ல சந்தர்ப்பத்தால் தான், வாழ்வில் நன்மைநடக்கிறதே ஒழிய, நாமாக ஒன்றையும் அடைந்து விட முடியாது. வாழ்வில் சாதனை புரிந்தாலும், அதற்கு காரணம் நானே என்று பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது.
*மன்னிக்கும் மனோபாவத்தால் மனதில் சாந்தம் எப்போதும் நிறைந்திருக்கும். வெறும் குற்றத்தை மட்டும் பார்க்காமல், அதைச் செய்தவனின் சூழ்நிலை, வாழ்வுமுறை போன்றவற்றையும் கருத்தில் கொண்டால் மன்னிப்பு தானாகவே வந்துவிடும்.
*முற்றும் நல்லவர், தீயவர் என்று ஒருவரைப் பார்க்கமுடியாது. விருப்பும், வெறுப்பும் கலந்தவர்களாகவே எல்லாரும் இருக்கிறோம். இதை உணர்ந்து விட்டால் பொறுமையுடன் விட்டுக் கொடுக்கும் பண்பு நம்மிடம் உருவாகும்.
*உடலைத் தூய்மைப்படுத்த தினமும் குளிப்பதைப் போல, மனதில் பொறாமை, வெறுப்பு, சுயநலம் போன்ற அழுக்குகளை போக்க அமைதி, அடக்கம், கொல்லாமை போன்ற சோப்புகளை பயன்படுத்த வேண்டும்.
*தாவரம், விலங்கு, பூச்சி, மனிதன் என உலகிலுள்ள எல்லா உயிரினங்களுக்கும் வாழ்க்கை பொதுவானது. வாழ்க்கை வாழ்வதற்கே என்னும் குறிக்கோளுடன் வாழ வேண்டும். இதை விட சிறந்த குறிக்கோள் வேறு எதுவும் இல்லை.
*நம்முடைய வாழ்நாள்குறுகியது. செய்ய வேண்டிய செயல்களோ மிகப் பெரியது. காலத்தை வீணாக்காமல் குறிக்கோளுடன் வாழ்வு நடத்த வேண்டும்.
-சுவாமி தயானந்த சரஸ்வதி

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar