Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆன்மிக போட்டியில் மாணவிகள் சாதனை நெகமம் விநாயகர் சிலைகள் ஆற்றில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் கொட்டும் மழையிலும் நடந்த விசர்ஜன ஊர்வலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2013
11:09

திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று மாலை, கொட்டிய மழையையும் பொருட்படுத்தாமல், மேளதாளம் முழங்க, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, ஆலாங்காடு பகுதியில் ஒருங்கிணைக்கப்பட்டன. கோவை சரக டி.ஐ.ஜி., கணேசமூர்த்தி தலைமையிலான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி சார்பில், திருப்பூரில் கடந்த 9ம் தேதி 640 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து, விளையாட்டு, கோலப்போட்டி, பூ கட்டும் போட்டி, கிராமிய கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கு தேசப்பற்று குறித்த கட்டுரை, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று நாட்கள் நடந்த சிறப்பு பூஜையை தொடர்ந்து, நேற்று விசர்ஜன ஊர்வலம் நடந்தது.வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், செட்டிபாளையம், ஸ்ரீநகர், பிச்சம்பாளையம், நெசவாளர் காலனி, எம்.எஸ்., நகர், பெருமாநல்லூர், இ.எஸ்.ஐ., கொங்கு மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட சிலைகள், மேள தாளம், தாரை தப்பட்டை முழங்க, முக்கிய வீதிகள் வழியாக புது பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தன.ஊர்வலத்தை, ஈஸ்வரன், காவி கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். இந்து முன்னணி கோட்ட ஒருங்கிணைப்பாளர் கி÷ஷார்குமார் தலைமை வகித்தார். செந்தில் மற்றும் சம்பத் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்துக்கு முன், இந்து முன்னணி கொடியேந்தி, வெள்ளை உடையில் தொண்டர்கள் அணிவகுத்துச் சென்றனர். பெருமாநல்லூர் ஒன்றியம் சார்பில், தொண்டர்கள் குதிரை மீது அமர்ந்து அணிவகுத்து வந்தனர். கேரள செண்டை மேளத்துடன், இருவர், சிவன் பார்வதி வேடத்தில், குதிரை பூட்டிய சாரட் வண்டியில் சென்றனர். தொடர்ந்து, ராஜ அலங்கார விநாயகர் சிலையும், ஆக்ரோஷ காளி வேடத்தில் ஒருவரும் அமர்ந்து வந்த வாகனமும் சென்றது. அவற்றைத் தொடர்ந்து, 108 சிறு விநாயகர் சிலைகள் அமைத்த வாகனம் உள்ளிட்ட மற்ற வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. ஊர்வலம் துவங்க, வாகனங்கள் புது பஸ் ஸ்õண்ட்டில் அணிவகுத்து நிற்கும்போதே, மழை பலமாக பெய்யத் துவங்கியது. கொட்டும் மழையிலும், விசர்ஜன ஊர்வலம் கோலாகலமாகத் துவங்கியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar