பதிவு செய்த நாள்
13
செப்
2013
11:09
சிவகாசி: சிவகாசி நாடார் பிரஸ் சித்திவிநாயகர் கோயிலில், விநாயகர் சதுர்த்தி விழா இரு நாட்கள் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடந்தது. 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்த திருவாசக பாடல் இசைப்போட்டியில், முதலிடம் பெற்ற என். நிவேதா, இரண்டாம் இடம் பெற்ற இசக்கியம்மாள், எஸ்.நிவேதா, மூன்றாம் இடம் பெற்ற சுவாதி பரிசு பெற்றனர். 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இந்துசமய அடிப்படை கருத்துகள் பற்றி ,வினாடி - வினா போட்டி நடந்தது. ஜாய்ஜனனிமுதலிடம் ,செல்வலட்சுமி இரண்டாம் இடம், சித்தார்த் மூன்றாம் இடம் பெற்று,வெற்றி பெற்றனர். பிளஸ் 1, பிளஸ்2 மாணவர்களுக்கு. "மகாபாரதத்தில் என்னை கவர்ந்த பாத்திரம் என்ற தலைப்பில். பேச்சு போட்டி நடந்தது. இதில், ஜோசிதா முதலிடம், கீர்த்திகாஇரண்டாம் இடம், சுபத்ரா மூன்றாவது இடம் பெற்று வெற்றி பெற்றனர். நடுவர்களாக ஏ.ஜெ. கல்லூரி பேராசிரியர்கள் சிவநேசன், வெள்ளைச்சாமி, பொன்னுச்சாமி பணியாற்றினர். வினாடி வினா போட்டிகளை, ஓய்வு ஆசிரியர் புகழ்சிங் நடத்தினார். பரிசளிப்பு விழாவிற்கு, நாடார் பிரஸ் துணை த்தலைவர் பாலசுப்பிரமணியன் பரிசுகளை வழங்கினார். மறுநாள் சித்தி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.