பதிவு செய்த நாள்
13
செப்
2013
11:09
மதுரை: மதுரையில், இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம், நேற்று நடந்தது. பா.ஜ., மாநில துணைத் தலைவர் ராஜா துவக்கி வைத்து பேசுகையில், ""கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தற்போது கோயில்களில் உள்ள நகைகள், தங்கம் இருப்பு குறித்து, மத்திய அரசு கேட்டுள்ளது. இந்நடவடிக்கை, கோயில்களை சூறையாட நினைக்கும் செயல். இதை கைவிட வேண்டும், என்றார்.இதில், 160 சிலைகள் இடம் பெற்றன; அவை, அனுமார்படித்துறை வைகையாற்றில் கரைக்கப்பட்டன.இந்து முன்னணி மாவட்ட தலைவர் பாண்டியன், பொது செயலாளர் அழகர்சாமி, இந்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.