பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
விழுப்புரம்:கொளத்தூர் கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர், கெங்கையம்மன், வள்ளி தெய்வானை உடனுறை சிவசுப்பரமணிய சுவாமி கோவில்களில் வரும் 15ம் தேதி அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடக்கிறது.விழாவை யொட்டி செப் 14ம் தேதி காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், இரண்டாம் காலயாக பூஜை நடக்கிறது. பின் மாலை 3:00 மணிக்கு புதிய சிலைகள் பிரதிஷ்டை செய்தல், 5:30க்கு மூன்றாம் காலயாக பூஜை, தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து 15ம் தேதி காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாகபூஜை, தத்வார்ச்சனை, 8:30 மணிக்கு யாத்ராதானம், 8:45 மணிக்கு கலச புறப்பாடு, 9:05 மணிக்கு விநாயகர், கெங்கையம்மன், முருகன் சுவாமிகளுக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.பின்னர் 11:00 மணிக்கு சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 9:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.