பதிவு செய்த நாள்
14
செப்
2013
10:09
விழுப்புரம்:பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவிலில், கும்பிஷேகத்தை முன்னிட்டு யாக சாலை பூஜை நடந்தது.விழுப்புரம் மாவட்டம் பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் மகா சம்ரோக்ஷணம் வரும் 16ம் தேதி காலை நடக்கிறது. இதையொட்டி கடந்த 12ம் தேதி முதற்கால பூஜை துவங்கியது. மாலை 6 மணிக்கு அனுக்ஞை, புண்யாகவாஜனம், யாகசாலை பிரவேசம், சோமகும்ப ஸ்தாபனம், அங்குரார் பனம், பூர்ணாஹூதி வேதபிரபந்த பாராயணம் சாற்றுமுறை முதல் கால ஆராதனை நடந்தது. செப் 13ம் தேதி காலை 8 மணிக்கு ரக்ஷா பந்தனம், வாஸ்து ஹோமம், துவாரபூஜை, வேத பிரபந்த பாராயணம், சாற்று முறை இரண்டாம் கால ஆராதனை நடந்தது. இரவு 7:45 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்துலட்சுமி, கோவில் அர்ச்சகர் பார்த்தசாரதி செய்திருந்தனர். செப் 14, காலை 8 முதல் 6 மணி வரை நான்காம் மற்றும் ஐந்தாம் கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. செப் 15 ஆறாம் கால யாகசாலை பூஜைகள், அனைத்து மூர்த்திகளுக்கும் 108 கலச திருமஞ்சனம் நடக்கிறது. வரும் 16ம் தேதி காலை 10 .10 மணி முதல் 10.30 மணிக்குள் சம்ரோக்ஷணம் நடக்கிறது.