ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயிலில், பவித்ர உற்சவம் நேற்று துவங்கியது. காலை 11 மணிக்கு,60 கலச அபிஷேகம் நடந்தது. வேதபிரான்பட்டர் மாளிகையிலிருந்து கொண்டு வரப்பட்ட, மஞ்சள் நூலினால் செய்யப்பட்ட பவித்ரமாலை, பெருமாளுக்கு சார்த்தப்பட்டு, சிறப்பு பூ ஜைகள் நடந்தன . 21ம் தேதி வரை நடக்கும் விழாவின் கடைசி நாளன்று இரவு ,வடபத்ரசாயி கருட வாகனம், பெரியாழ்வார் அன்ன வாகனத்தில், வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.