பதிவு செய்த நாள்
16
செப்
2013
11:09
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த சேசன்சாவடியில், மஹா சக்தி மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வெகுவிமரிசையாக நடந்தது. வாழப்பாடி அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி, சேசன்சாவடி கிராமத்தில், பழமையான மஹா சக்தி மாரியம்மமன் மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. குறிஞ்சி கோபுரம், மஹா மண்டபம், ராஜகோபுரம் சகிதமாக ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. பணி முடிந்து கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், திருச்சி சமயபுரம் யானை, வேப்பிலைக்குட்டை ஓம்சக்திகோவில் குதிரை மற்றும் கோமாதா நந்தியுடன் தீர்த்தகுடங்கள் மற்றும் கலச பாலிகை ஊர்வலமும், கலசத்திற்கு தானியம் நிரப்பும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், யாகவேள்வி பூஜைகளும், இரவு, 11 மணிக்கு மேல் செல்லியம்மன் மற்றும் மாரியம்மன் விக்ரங்களுக்கு கண்திறப்பு சிறப்பு பூஜைகளும் நடந்தது. நேற்று அதிகாலை, 5 மணிக்கு செல்லியம்மன் திருக்கோவில் விமான கும்பாபிஷேகமும், 7 மணிக்கு மஹா சக்தி மாரியம்மன் கும்பாபிஷேகமும் வெகுவிமரிசையாக நடந்தது. விழாவில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.