பதிவு செய்த நாள்
16
செப்
2013
11:09
புளியரை : அச்சன்புதூர் குற்றால விநாயகர் கோயிலில் இன்று (16ம் தேதி) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தென்காசி அருகேயுள்ள அச்சன்புதூரில் பிரசித்திபெற்ற பழமையான குற்றால விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் இன்று (16ம் தேதி) காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நேற்று காலை மங்கள இசை, திருமுறை பாராயணம், விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், தேவதா அனுக்ஞை, பஞ்ச கவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பிரம்மச்சாரியபூஜை, கோபூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தன. மாலையில் பூஜைகள், யாகசாலை வேள்விகள் நடந்தன. இரண்டாம் நாள் யாகசாலை தீபாராதனை நடந்தது. இரவு யந்திர ஸ்தாபனம் உட்பட பூஜை வழிபாடுகள் நடந்தன. இன்று (16ம் தேதி) காலை விக்னேஷ்வர பூஜை, சக்தி உரு ஏற்றுதல், நான்காம் காலபூஜை, யாகசாலை எழுந்தருளல் நடக்கிறது. காலை 6.15 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் குற்றால விநாயகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், விசேஷ அலங்கார தீபாராதனை நடக்கிறது. மாலையில் விநாயகர் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை குற்றால விநாயகர் கோயில் பக்தர்கள் குழு, நெடுவயல், அச்சன்புதூர் குழுவினர் செய்து உள்ளனர்.