செங்கோட்டை ஆறுமுக சுவாமி ஜீவசமாதியில் இன்று கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2013 11:09
தென்காசி : செங்கோட்டை சற்குரு ஆறுமுக சுவாமி ஒடுக்கம் ஜீவசமாதியில் இன்று (16ம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. செங்கோட்டை சற்குரு ஆறுமுக சுவாமி ஒடுக்கம் ஜீவசமாதியில் இன்று (16ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கணபதி ஹோமமும் 14ம் தேதி காலை கோ பூஜை, சுதர்சன ஹோமத்துடன் மாலை 5 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜையும், மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடந்தது. இதை தொடர்ந்து இன்று (16ம் தேதி) காலை 4 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜையும் 6 மணிக்கு கடம் புறப்பாடு, தொடர்ந்து 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 9 மணி முதல் சிறப்பு அபிஷேகம் தீபாராதனை, மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.