பதிவு செய்த நாள்
18
செப்
2013
10:09
செங்கல்பட்டு:செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோவிலில், ஹயக்ரீவ ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, செட்டிபுண்ணியம் கிராமத்தில், அருள்மிகு தேவநாத பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், ஹயக்ரீவ ஜெயந்தி விழா நடைபெறும். அதன்படி, இந்தாண்டு விழா, நேற்று நடந்தது. காலை, 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம், சிறப்பு திருமஞ்சனம் ஆகியவை நடந்தன. விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டு, சுவாமியை வழிபட்டனர்.