பதிவு செய்த நாள்
18
செப்
2013
10:09
மதுரை:மதுரை சக்குடி ஆதிசொக்கநாதர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருகிறது. இக்கிராமம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் "ஆதிமதுரை என அழைக்கப்பட்டது. வரகுண பாண்டியனிடம் தலைமை அமைச்சராக இருந்த மாணிக்கவாசகர், திருப்பணி செய்த பெருமை பெற்றது இத்தலம். காலப்போக்கில் சிதிலமடைந்த இக்கோயிலின் திருப்பணி, கடந்த வாரம் துவங்கியது. இதையொட்டி, பூமிபூஜை, கோபூஜை, திருப்பணி பூஜை, வாஸ்துபூஜையை கண்ணன் சிவாச்சாரியார் நடத்தினார். கும்பாபிஷேக ஏற்பாட்டாளர் மகாலட்சுமி, பேராசிரியர் ரமணி, பிரசன்ன வாக்கியர் பாண்டியராஜன், முன்னாள் உயர்கல்வித்துறை இயக்குனர் பாண்டி, பன்னிரு திருமுறை ஆய்வாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.