மடத்துக்குளம் அருகே தாசர்பட்டியில் அமைந்துள்ள மணல்நாட்டு மாரியம்மன்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 14ம் தேதிகாலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. நேற்றுமுன்தினம் காலை 6.00 மணிக்கு மங்கள இசையும், காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை 10.00 மணிமுதல் அன்னதானம் நடந்தது.மடத்துக்குளம் எம்.எல்.ஏ., சண்முகவேலு,ஒன்றியக்குழு தலைவர் அண்ணாதுரை மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.