தியாகதுருகம்: தியாகதுருகம் மலையம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. தியாகதுருகம் மலைமீதுள்ள பகவதி மலையம்மன் கோவிலில் பவுர்ணமி தினத்தை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மலர் அலங்காரம் செய்து அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்டு வலம்வந்தது. பக்தர்கள் கிரிவலம் வந்து அம்மனை வழிபட்டனர். இரவு நடந்த மகா தீபாராதனையில் ஏராளமானோர் சாமிதரிசனம் செய்தனர். சுவாமிநாத குருக்கள் பூஜைகளை செய்தார்.