கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெருமாள் தாயாருக்கு நித்திய கல்யாண உற்சவம், 35 நாட்கள் நடக்கிறது. கள்ளக்குறிச்சி புண்டரீகவள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு புரட்டாசி மாதம் தினந்தோறும் திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி புரட்டாசி 1ம் தேதி திருக்கல்யாணம் துவங்கியது. இம்மாதம் நான்கு சனிக்கிழமைகள் மற்றும் மகாளாய அமாவாசையை தவிர்த்து, ஐப்பசி 10ம் தேதி வரை தொடர்ந்து 35 நாட்கள் திருக்கல்யாணம் நடக்கிறது.