பதிவு செய்த நாள்
20
செப்
2013
11:09
துறையூர்: துறையூர் பெருமாள்மலையில், புரட்டாசி மாத சனிக்கிழமை முதல்வார உற்சவம் நாளை துவங்குகிறது. இரண்டாவது வார சனி உற்சவம், 28ம் தேதியும், மூன்றாவது வார சனி உற்சவம் அக்டோபர், 5ம் தேதியும், நான்காவது வார உற்சவம் அக்டோபர், 12ம் தேதியும், ஐந்தாவது வார உற்சவம் அக்டோபர், 19ம் தேதியும் நடக்கிறது. ஐந்து வார உற்சவ நாளிலும், மலைமீது செல்லும் டூவீலர் மற்றும் கார், வேன், வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. துறையூர் பெருமாள்மலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் கருப்பண்ணார் சன்னதியில் வேறெந்த வைணவ கோவிலும், இல்லாத சிறப்பாக விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது. மலை மீது செல்ல ஐந்து கி.மீ., நீளமுள்ள மலை பாதையும், ஆயிரத்து, 564 படிக்கட்டுகள் உள்ளது. மலை மீது செல்ல கார், வேன், டூவீலரில் செல்லலாம். புரட்டாசி ஐந்து வார சனி உற்சவ நாட்களிலும், மற்ற நாட்களிலும் கோவிலுக்கு வந்து பெருமாள் அருள்பெற வேண்டுமென, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.