அன்னூர்: "மேலைத் திருப்பதி என்றழைக்கப்படும் மொண்டிபாளையம் வெங்கடேசப் பெருமாள் கோவில் 300 ஆண்டுகள் பழமையானது. இந்த ஆண்டு புரட்டாசி திருவிழா 14ம் தேதி துவங்கியது. வரும் அக்., 19 வரை ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மகா அபிஷேகமும், திருமஞ்சனமும் நடக்கிறது. இரவு புஷ்ப பல்லக்கு அலங்காரத்தில், சுவாமி கருட வாகனத்தில் திருவீதியுலா நடக்கிறது.கோவை, அன்னூர், திருப்பூர், அவிநாசி, புளியம்பட்டியிலிருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.