பதிவு செய்த நாள்
21
செப்
2013
10:09
தேவாரம் : கோம்பை திருமலை ராயப்பெருமாள் மலைக்கோயிலில், புரட்டாசி முதல் சனி வார திருவிழா இன்று துவங்குகிறது. கோம்பை திருமலை ராயப்பெருமாள் மலைக்கோயிலில், புரட்டாசி 5 சனிக்கிழமைகளிலும் திருவிழா நடைபெ றும். முதல் வார திருவிழாவை முன்னிட்டு, ஊர் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தி ஊர்வலமாக மலை கோயிலுக்கு அழைத்து செல்லப்படுகிறார். ஆனந்த சயனத்தில் உள்ள, சுயம்பு மூலவரை தரிசிக்க தேனி, திண்டுக்கல், மதுரை, மத்திய கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். பக்தர்கள் வசதிக்காக போடி, தேவாரம், கம்பம் அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பு பஸ்களை மலை கோயிலுக்கு இயக்குகின்றன. கேரளாவில் இருந்து, மலைப்பாதை வழியாக நடந்து வரும் பக்தர்களுக்காக, மருத்துவ வசதி, உணவு, குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.