பதிவு செய்த நாள்
21
செப்
2013
10:09
திருப்பூர்:புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, ராமசாமி கோவிலுக்கு பக்தர்கள் சென்று வர வசதியாக 40 சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. திருப்பூர் அருகே கோவில்பாளையத்தில் ராமசாமி கோவில் உள்ளது. புரட்டாசி சனிக்கிழமைகளில் காலை 6.00 முதல் இரவு 7.00 மணி வரை சிறப்பு பூஜை நடக்கும். கோவை, கரூர், பழனி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உடுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து வழிபடுவர். வெளியூரில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் வசதிக்காக, திருப்பூரில் இருந்து 20; காங்கயத்தில் இருந்து ஐந்து; பல்லடத்தில் இருந்து 15 என 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சர்வீஸ் பஸ் களில், பயணிகள் கூட்டத்துக்கு ஏற்ப, ஏற்றி இறக்க வேண்டும் என டிரைவர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், "போக்குவரத்து அலுவலர் ஒருவர் தலைமையில் ஆறு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்படும். அவர்கள், ராமசாமி கோவிலில் நின்று செல்லும் பஸ்கள், சிறப்பு பஸ்களை கண்காணிப்பர். "பல்லடத்தில் இருந்து காங்கயம்; திருப்பூரில் இருந்து கொடுவாய்; கொடுவாயில் இருந்து பொங்கலூர் செல்லும் எல்.எஸ்.எஸ்., பஸ்கள் நீங்கலாக அனைத்து பஸ்களும் நின்று செல்லும். சிறப்பு பஸ்களில் ராமசாமி கோவில் என ஸ்டிக்கர் ஒட்டப்படும். வழக்கமான, கட்டணமே வசூலிக்கப் படும், என்றனர்.