பதிவு செய்த நாள்
21
செப்
2013
10:09
ஆர்.கே.பேட்டை: பவுர்ணமியை ஒட்டி, பொன்னியம்மன் கோவிலில், சிறப்பு தீபஆராதனை நடந்தது.ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் கிராமத்தில், பொன்னியம்மன் கோவில் அமைந்து உள்ளது. செப் 19, பவுர்ணமியை ஒட்டி, கோவிலில், சிறப்பு தீபாராதனை நடந்தது.காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேகமும், இரவு, 7:00 மணிக்கு, சிறப்பு அலங்காரமும் நடந்தன. பின், கோவில் வெளிபிரகாரத்தில், கோபுர வாசலில், பவுர்ணமி நிலவுக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தி பாடல்கள் பாடப்பட்டன. தொடர்ந்து, கோவில் வளாகத்தில், வாணவேடிக்கையுடன், அம்மன் புறப்பாடு நடந்தது.இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.