Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மதுரையில் ஒரே இடத்தில்..108 திவ்ய தேச பெருமாளின் தரிசனம்! மதுரையில் ஒரே இடத்தில்..108 திவ்ய தேச ... கேதார்நாத் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்க வீடுகள் தயார் கேதார்நாத் கோவிலுக்கு வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 140 வது உழவாரப்பணி!
Share
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 செப்
2013
09:43

இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் முதலாவது திருப்பணி 20-01-2001 அன்று நெடுங்குன்றம் அருள்மிகு திரிபுர சுந்தரி உடனுரை அகத்தீஸ்வரர் திருக்கோவில் நடைபெற்றது. சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள திருக்கோவில்களில் பிரதி மாதம் 4வது ஞாயிற்றுக்கிழமை காலை 8-00 மணி முதல் மாலை 6-00 மணி வரை உழவாரப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து அடியார்கள் பகுதி வாரியாக வாகனம் அமைத்து உழவாரப்பணி நடைபெறும் ஊருக்கு வந்தடைவார்கள். உழவாரப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் கோவில் பராமரிப்பு அற்ற நிலையில் மற்றும் நித்திய பூஜை நடைபெறாத நிலையில் உள்ள ஆலயங்களை பார்வையிட்டு விவரம் அறிந்து அனைத்து அடியார்களுக்கும் நோட்டீஸ் மூலமாக தெரிவிக்கப்படும். அக்கோவில் பிரகாரம் சுத்தம் செய்தல், சுண்ணாம்பு அடித்தல், பிரகாரத்தில் தேவாரம், திருவாசகம், திருமுறை பாடல்களை எழுதுதல் போன்ற பணிகளை மேற்கொள்வோம். இதுவரை 138 கோவில்களில் உழவாரப்பணி செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக 49 கோவில்கள் உழவாரப்பணிக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்த உழவாரப்பணியில் இன்று 600 அடியார்கள் சென்னையில் இருந்து கலந்து கொண்டு நடந்து வருகிறது. திருநாவுக்கரசர் என்ற அப்பர் பெருமானால் துவங்கப்பட்ட உழவாரப்பணியை தொடர்ந்து அடியார்களுடன் உழவாரப்பணியில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் அனைவரும் வருகை தந்து இறைபணி செய்து இறைவனின் திருவருள் பெறலாம்.

140 வது மாத உழவாரப்பணி:
நாள் 22-09-2013 இடம்; பெரியநத்தம், செங்கல்பட்டு
இறைவர்: ஸ்ரீ கமலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சேப்பாடி அம்மன் திருக்கோயில்களில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உழவாரப்பணி மதியம் 2 மணிக்கு அடியார் தமை அமுது செய்வித்தல் தொடர்ந்து உழவாரப்பணி திருக்கூட்டம். மாலை 5 மணிக்கு அடியார் பெருமக்கள் அனைவரும் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு அதற்க்குரிய அடியார்கள் அனைவரும் ஒன்றாக புறப்பட வேண்டும்.

புறப்படும் இடங்கள்
*வடபழநி(வேங்கீஸ்வரர் திருக்கோயில்)
*பெருங்களத்தூர்(ஐ. ஓ.பி பேங்க் வாசல்)
*பெரம்பூர் ரமணா நகர்(துர்கா மெடிக்கல்ஸ்)
*சூளைமேடு பஜனை கோயில்
*அனகாபுத்தூர்(முருகன் கோயில் அருகில்)
*கோயம்பேடு(குறுங்காலீஸ்வரர் திருக்கோயில்)
*அம்பத்தூர்(கணேஷ் டிம்பர் அருகில்)
*பவுஞ்சூர்(செய்யூர் தாலுக்கா)
*நெற்குன்றம்(வெங்காய மண்டி பஸ் நிறுத்தம் அருகில்)
*ஆற்காடு ரோடு(மாதா அமிர்தானந்தாமயி மடம் எதிரில்)

பிரதி மாத நிகழ்வுகள்
முதல் ஞாயிறு காலை திருவாசக முற்றோதல்
இடம்:ஸ்ரீ வேங்கீஸ்வரர் திருக்கோயில்,
வடபழநி, சென்னை-26

இரண்டாம் ஞாயிறு காலை முதல் மாலை வரை
கும்பகோணம் பகுதியில் உழவாரப்பணி

மூன்றாம் ஞாயிறு: காலை திருமுறை முற்றோதல்
இடம்: ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
தாம்பரம்  சென்னை-45

நான்காம் ஞாயிறு: காலை முதல் மாலை வரை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட கோயில்களில் உழவாரப்பணி மற்றும் மாலையில் இறைவர் திருமுன்பு கூட்டு வழிபாடு

இறைபணியில் எம்.எப். ஜே லயன். எஸ். கணேசன் ,உழவாரபணி 9840123866
சிவஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி இல்லம், எண் 3/5 பரோடா தெரு விரிவு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மயிலாடுதுறை : சீர்காழி கோயிலில் திருஞான சம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் திருமுலைப்பால் ... மேலும்
 
temple
தஞ்சாவூர் : கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில், சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நேற்று ... மேலும்
 
temple
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1004 வது அவதார தின விழா ... மேலும்
 
temple
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கியது. ... மேலும்
 
temple
மேட்டுப்பாளையம்: மருதூர் அனுமந்தராய சுவாமிக்கு, சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழாவில், காய்கறிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.