பதிவு செய்த நாள்
25
செப்
2013
05:09
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, மானிடராய் பிறந்தாலும்... 108 திவ்ய தேச ஸ்தலங்களில் உள்ள பெருமாளை காண்பது அரிது.. கோயில் மாநகரமாம் மதுரையில் இந்த பாக்கியம் கிடைப்பது அரிது... மதுரையில் முதன்முறையாக பிரம்மாண்டமாய் 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனத்தை மதுரை தமுக்கம் மைதானத்தில் கன்னிகா பரமேஸ்வரி அசோசியேட்ஸ் பக்தியுடன் வழங்குகிறது.
பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
எனும் தொண்டரடிப் பொடியாழ்வாரின் வாக்கிற்கிணங்க, 108 திவ்ய தேச பெருமாளின் தரிசனத்தை நமது சங்கம் வளர்த்த மாமதுரையில் மிகப் பிரம்மாண்டமாகவும், மிக நேர்த்தியாகவும், பெருமாளின் விஸ்வரூப தரிசனம் தத்ரூபமாக நடத்த இருக்கிறது. இந்த நான்கு நாட்களில் 108 பெருமாளின் தரிசனத்தை கண்டு, அருட்பிரசாதம் பெறவும், மகான்களின் ஆன்மீக உரையை கேட்டு இறையருள் பெறவும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை மக்கள் அனைவரும் கண்டு எம்பெருமானின் அருள்பெற வேண்டுகிறோம். மேலும் இந்த மாபெரும் இறைப்பணியில், தாங்கள் உடலாலும், பொருளாலும் தங்களை அர்ப்பணிக்க விரும்பினால் தொடர்பு கொள்ள ..
நவீன்: 96002 11912
பாலாஜி: 91507 55566
நாள்: 26,27,28,29 செப் 2013
இடம்: தமுக்கம் மைதானம், மதுரை