திருவாரூர்: நீடாமங்கலத்தில் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பால் பழுதடைந்து வ ரும் திருத்தேரினை பாதுகாத்திட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சையை ஆட்சி செய்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மராஜன் அவர் மø னவி யமுனாம்மாள் தம்பதியினருக்கு பல ஆண்டுகளாக புத்திரபாக்கியம் இல்லாமல் இருந்தனர்.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் சந்தான ராமர் சுவாமி திருவருளால் புத் திரபாக்கியம் கிடைத்துள்ளது. அதன் பின் மன்னன் 1761ம் ஆண்டு நீடா மங்கலத்தில் கோவில் எழுப்பி சீதா, லட்சுமனர், அனுமன், சந்தான ராம னுக்கு சிலையை நிறுவியதுடன், திருக்குளம் வெட்டி, பல நூறு ஏக்கர் நிலம் எழுதி வைத்துள்ளார். அன்றுமுதல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் செய்த நிலையில் புத்திரபாக்கியம் கிடைத்ததாகவும் அ ன்று முதல் பல நூறு ஆண்டுகளாக இக்கோவிலுக்கு வந்து செல்லவதாக வர லாறு கூறுகிறது. இக்கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. முத்துசுவாமிதீட்சிதரால் பாடல்பெற்ற தலமான இங்கு ராமநவ மயின் பத்தாம் நாள் திருத்தேரோட்டம் நடக்கிறது. இதற்காக திருத்தேர் வடிவமைக்கப்பட்டு தேர்முழுவதும் ராமாயண காதாபாத் திரங்கள் கூடிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்த காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர் பழுதடைந்ததால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைத் தனர். அன்று முதல் பராமரிப்பில்லாமல் பழுடைந்து வருகிறது. கலை நய மிக்க காட்சிப்பொருட்கள் சிதைந்து வந்தது. அப்பகுதி மக்கள் கோரிக் கையைத் தொடர்ந்து சமீபத்தில் திருச்சி பெல் நிறுவனத்தினர். தேருக்காக நான்கு சக்கரங்கள் செய்து வழங்கினர். அவற் றையும் இந்து சமய அறநி லையத்துறை அதிகாரிகள் பாதுகாக்காமல் கிடப் பில்போட்டுள்ளனர். எனவே கலை பொக்கிஷமாக கருதப்படும் திருத்தேரினை சரி செய்து தே ரோட்டம் நடத்த வேண்டும் எனவும், அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்த்துள்ளனர்.