பதிவு செய்த நாள்
27
செப்
2013
10:09
டேராடூன்: மழை, வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில், அடுத்த மாதம் முதல் கேதார்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கப்படும், என, அம்மாநில முதல்வர், விஜய் பகுகுணா கூறியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், ஜூன் ஜூலை மாதங்களில் பெய்த பேய் மழை, பெரு வெள்ளத்தால், மாநிலத்தின் முக்கிய சாலைகள் சேதமடைந்தன. முக்கிய சுற்றுலா தலங்கள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டதால், கேதார்நாத் புனித யாத்திரையும் தடை செய்யப்பட்டது. மாநில அரசு, சாலைகள் அமைத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில் சில முக்கிய சாலைகள் முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, ""கேதார்நாத் புனித யாத்திரை, அடுத்த மாதம், 1ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும், என, மாநில முதல்வர், விஜய் பகுகுணா அறிவித்துள்ளார். எனினும், குறைந்த அளவிலாள குறிப்பிட்ட சுற்றுலா பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மற்ற சுற்றுலா தலங்களான, முசவ்ரி, .நனிடால், ரிஷிகேஷ் போன்ற இடங்களில் பெரும் பாதி“ப்பு நிகழாததால், அங்கும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவர் கூறினார்.