பதிவு செய்த நாள்
27
செப்
2013
10:09
பழநி: பழநி கோயில் உண்டியலில், 21 நாட்களில் ரூ.1.17 கோடி வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில், தங்கம் 724 கிராம், வெள்ளி 5798 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 395 மற்றும் ரொக்கமாக ஒரு கோடியே 17 லட்சத்தி 46 ஆயிரத்தி 890 ரூபாய் காணிக்கையாக 21 நாளில் கிடைத்தது. தாலிகள், வீடு, ஆள்ரூபம், மோதிரம், கைக்கடிகாரம், வேல் போன்ற தங்கம் மற்றும் வெள்ளி யிலான பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திருந்தனர். ஒரே பக்தர் 5 பவுன் தங்ககாசு மாலையை ஓம் வடிவ டாலருடன் காணிக்கையாக செலுத்தியிருந்தார். உண்டியல் எண்ணிக்கை முறைகேடுகள் நடக்காமல் இருக்க, புதிதாக நான்கு இடங்களில் வீடியோ கேமரா மூலம், பணம் எண்ணுவது, நகை மதிப்பீட்டு பணி ஆகியவை பதிவு செய்யப்பட்டது. கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் ரமேஷ், முதுநிலைகணக்காளர் ஜெயப்பிரகாசம் உடனிருந்தனர்.