வேலாயுதம்பாளையம்: பாலமலை பாலசுப்பிரமணி கோவிலில் திருப்புகழ் திருப்படி விழா நடந்தது. பவித்திரம் பாலமலை பாலசுப்பிரமணி கோவில், 15ம் ஆண்டு திருப்புகழ் திருப்படி விழா நேற்று நடந்தது. இதில், அனைத்து படிகளுக்கும் தலைவாழை இலை வைத்து அதன்மேல் பச்சரிசி, தேங்காய், பழம் வைத்து மலர்களை தூவி திருப்புகழ் பாடி ஒவ்வொரு படியாக பூஜைகள் நடத்தப்பட்டன. இதே போல், கோவிலில் உள்ள, 55 படிகளுக்கு திருப்படி பூஜை நடந்தது. பின், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவில் கோவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.