புரட்டாசி சனிக்கிழமை: கோயில்களில் சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28செப் 2013 04:09
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் பெருமாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா சத்தியமங்கலம் கோதண்டராமர் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு நடந்த திருப்பாவாடை உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் ரங்கநாதர் அருள்பாலித்தார். சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாதர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.