கோத்தகிரி: கோத்தகிரி பேட்லாடா கிராமத்தில் உள்ள வேணுகோபால் கிருஷ்ணர் கோவிலில் உறியடி உற்சவம் நேற்று நடந்தது. அதிகாலை முதல் கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, பஜனை, ஆடல் பாடல் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. பகல் 2:00 மணிக்கு, உறியடி உற்சவம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி ராஜூ லட்சுமணா கவுடர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.