ராமேஸ்வரம் : விவேகானந்தா கேந்திரம் சார்பில், உலக நன்மைக்காக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தில், ராமேஸ்வரம் விவேகானந்தர் பள்ளி தாளாளர் சுவாமி சாரதானந்தா தலைமையில், 2007 திருவிளக்கு பூஜை நடந்தது. டாக்டர் மீனாகுமாரி துவக்கி வைத்தார். முன்னதாக நடந்த மாதர் மாநாட்டில், "ராமாயணத்தில் தெரிந்ததும், தெரியாததும் என்ற நூலை வெளியிடப்பட்டது. ராமேஸ்வரம் டி.எஸ்.பி., மோகன்ராஜ் பெற்று கொண்டார். ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட விவேகானந்தா கேந்திரம் பொறுப்பாளர் செல்வராஜ் செய்திருந்தார்.