திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில், பிறவி மருந்தீஸர் கோவிலில் நவராத்திரி விழா மூன்றாம் நாள் வழிபாடு நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். நவராத்திரி விழாவையொட்டி, மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பக்தர்கள் சார்பில் பிறவி மருந்தீஸர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, மாலையில் மங்கள நாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். நவராத்திரி விழாவை முன்னிட்டு, "அன்றைக்கு இன்றே சொல்லி விட்டேன் என்னும் தலைப்பில் பேராசிரியர் அறிவொளி பேசினார். ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.