பதிவு செய்த நாள்
09
அக்
2013
11:10
அம்பிகையை இந்திராணியாக அலங்கரித்து வழிபட வேண்டும். இவளை வழிபட்டால் சுகபோக வாழ்வு கிடைக்கும். மதுரை மீனாட்சி சித்தர் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். அபிஷேக பாண்டியன் ஆட்சிக் காலம். ஒரு பொங்கலன்று மன்னன் கோயிலை வலம் வந்து கொண்டிருந்தான். பிரகாரத்தில் சித்தர் அமர்ந்திருந்தார். அவரை சோதிக்க விரும்பிய மன்னன், ஒரு கரும்பை கொடுத்து, "" சித்தரே! நீர் சக்தி மிக்கவர் என்று எல்லாரும் சொல்கிறார்கள். அதை நிரூபிக்க, இங்குள்ள கல் யானையிடம் கரும்பைக் கொடும்! அது அதை தின்னுமானால், நீர் எல்லாம் வல்ல சித்தர் தான், என்று சவால் விட்டான். புன்னகைத்த சித்தர் கல்யானையை பார்க்க, யானையும் துதிக்கையை அசைத்து கரும்பை சுவைத்தது. அவரது சக்தியறிந்த மன்னன், ""ஐயனே! மன்னித்து விடுங்கள். நீண்டகாலம் பிள்ளை இன்றி வாடும் என் குறையை போக்க வேண்டும் என்று பணிந்தான். சித்தரும்,""விரைவில் மகப்பேறு வாய்க்கும், என சொல்லி மறைந்தார். சித்தராக வந்தது சொக்கநாதர் என உணர்ந்தான். சித்தர் அலங்காரத்தை தரிசித்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு மகப்பேறு வாய்க்கும்.
நைவேத்யம்: வெண்பொங்கல்
தூவ வேண்டிய மலர்: பிச்சி, செவ்வந்தி
பாட வேண்டிய பாடல்:
கண்களிக்கும்படி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல்வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர்குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டி தன் பேரழகே.