கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புனித ஜெபமாலை அன்னை பங்கின் நூற்றாண்டு துவக்க விழா நடந்தது. புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி மறை மாவட்ட முதன்மை குரு அருள் தாஸ் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஜோசப் அருமை செல்வம் மறையுரையாற்றினார். முன்னாள் பங்கு தந்தைகள் அந்தோணிசாமி, ஆரோக்கிய சாமி, ரிச்சர்ட், ஜெகராஜ் மற்றும் சுற்று வட்டார குருக்கள் கலந்து கொண்டனர். நூற்றாண்டு விழாவின் தொடக்கத்தினை பங்குதந்தை ஜோசப்ராஜ் பேசினார். பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கவிஞர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார்.