திருவள்ளூர்: வல்லப கணபதி கோவிலில் நடைபெறும், நவராத்திரி விழாவில், சிறுவர்கள் கோலாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர், மகா வல்லப கணபதி கோவிலில், உலக நன்மைக்காக, 2ம் ஆண்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதில், ஆந்திர மாநிலத் தைச் சேர்ந்த பஜனை குழுவினர் பங்கேற்ற, சிறப்பு கலாட்சேபம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறுவர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. நவராத்திரி கொலுவில், ராமர் பட்டாபிஷேகம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட, 150க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.