புதுக்கோட்டை அருகே குறிச்சி என்ற இடத்தில் சுமார் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த அஷ்ட புஜ மகாலட்சுமி துர்க்கா கோயில் அமைந்துள்ளது. எட்டுக்கரங்களுடன் மகாலட்சுமி கோலத்தில் அருள்பாலிக்கும் இந்த துர்க்கையை வணங்குவோர்க்கு தீராத வியாதிகளும் தீரும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் இமயமலைப்பகுதியில் காணப்படும் ருத்ராட்ச மரம் அமைந்துள்ளதுடன், அதன் கீழ் இரண்டு விநாயகர்கள் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பு.