துளசி என்ற சொல்லுக்கு, தன்னிகரற்றது என்று பொருள். துளசி திருமாலுக்கும் திருமகளுக்கும் உகந்த பிரசாதம். மகாலட்சுமியின் சொரூபமான துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு எப்போதும் வாசம் செய்கிறார். அதனால் துளசிக்கு ஹரிப்ரியா என்ற பெயரும் உண்டு. துளசிலட்சுமி, தன்னிகரற்ற தலைவியாவாள். அவளை வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும், தடை நீங்கி திருமணம் நடைபெறும்.