பதிவு செய்த நாள்
12
அக்
2013
10:10
திருச்செங்கோடு: திருச்செங்கோடு பத்ரகாளியம்மன், பெரிய மாரியம்மன் கோவில்களில், நவராத்திரி பெருவிழா கோலாகலமாக நடக்கிறது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலின் துணைக் கோவிலான பத்ரகாளியம்மன் மற்றும் பெரிய மாரியம்மன் கோவில்களில், நவராத்திரி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று, ரூபாய் நோட்டு சொர்ணம்பிகையம்மாள் அலங்காரத்தில், பத்ரகாளியம்மன் ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாளித்தார். குங்கும அர்ச்சனை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பெரிய மாரியம்மன் கோவிலில், ஸ்வாமி கஜலட்சுமி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தார். பத்ரகாளியம்மன் கோவிலில், இன்று (அக்., 12) நீலசரஸ்வதி அலங்காரம், நாளை (அக்., 13) அம்பாள் ஊஞ்சல் உற்சவம், 108 கலச பூஜை, மதுகைபட சம்ஹார காளியம்பிகை அலங்காரம், அக்டோபர், 14ம் தேதி, அம்பாள் ஆதிசேஷன் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தொடர்ந்து, வெள்ளி கவச அலங்காரம் நடக்கிறது. அம்பாளுக்கு தினமும் சிறப்பு பூஜை, ஹோமம், தீபாராதனையும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.