பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
பெங்களூரு: நவராத்திரி விழாவை முன்னிட்டு, மைசூரு தஸராவில் இன்று, "ஜம்பு சவாரி நடக்கிறது. உலக புகழ் பெற்ற மைசூரு தஸரா விழாவை, கடந்த 4ம் தேதி, மைசூரு சாமுண்டி மலையில், கர்நாடக முதல்வர் சித்தரா மையா முன்னிலையில், ஞானபீட விருது பெற்ற சந்திரசேகர கம்பாரா, சாமுண்டீஸ்வரிக்கு பூஜை செய்து துவக்கி வைத் தார். தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விஜயதசமி தினமான இன்று, "ஜம்பு சவாரி நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க, கர்நாடகா மட்டுமின்றி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். நிறைவு நாளான இன்று மதியம், 1.12 மணியிலிருந்து, 1.40 மணிக்குள் "நந்தி துவாஜா பூஜை நடக்கிறது. 1.55 மணி யிலிருந்து, 2.23 மணிக்குள் "ஜம்பு சவாரியை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். *கண்டதத்த நரசிம்மராஜ உடையார் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். 14 யானைகள் அணிவகுத்து ஊர்வலம் செல்லும்.இரவு ஏழு மணிக்கு பன்னி மண்டபத்தில் நடக்கும் "டார்ச் லைட் நிகழ்ச்சியில் கவர்னர் பரத்வாஜ் பங்கேற்கிறார். விழாவையொட்டி, மைசூரு முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது.