பதிவு செய்த நாள்
14
அக்
2013
10:10
திருக்கோவிலூர்: திருவண்ணாமலை, பகவான் யோகிராம் சுரத்குமார் ஆசிரமத்தில் ஆயுத பூஜை விழா நடந்தது. விழாவையொட்டி வைக்கப்பட்டிருந்த கொலுவில், அம்பாள், பல்வேறு வடிவங்களில் அருள் பாலித்தார். விழா நடந்த, ஒன்பது நாட்களும், மாலை, 6:00 மணிக்கு துவங்கி, ஒன்றரை மணி நேரம் இன்னிசை கச்சேரி நடந்தது.விழாவின் நிறைவாக, நேற்று காலை, 6:00 மணிக்கு, லலிதா சகசர நாமம், 9:00 மணிக்கு சரஸ்வதி பூஜை, ஆரத்தியும், மாலை, 6:00 மணிக்கு ஆயுதபூஜை விழா நடந்தது. இதையடுத்து, குப்புராஜ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. சுவாமியின் அதிஸ்டான வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கொலு காட்சியில் ராமாவதாரம், அமர்நாத் பனிலிங்கம், பகவான் யோகிராம்சுரத்குமார் அவதரித்த புண்ணிய பூமியான, உத்தரபிரதேச மாநிலம், நர்தரா கிராமத்தில் கட்டப்பட்டுள்ள, பகவான் நினைவிடம் ஆகியவை, தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.விழா நாட்களில், தினமும், பெண்களுக்கு சேலை, ஜாக்கெட், சிறுமிகளுக்கு பாவாடை, சட்டை வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை ஆஸ்ரம நிர்வாகி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.