மதுரை: கொட்டாம்பட்டி அருகே கருக்காய்குடி கல்வெட்டுகளை காண தானம் அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய நடைபயணம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பாரதி தலைமையில் சென்று, கல்வெட்டுகளில் உள்ள தகவல் குறித்து அக்கிராம மக்களுக்கு விளக்கக்கப்பட்டது. தொல்லியல் துறை ஆய்வாளர் வேசதாசலம் கூறுகையில், ""இங்கிருந்த 2 கல்வெட்டுகளில் ஒன்று, முற்றிலும் அழிந்து விட்டது. மற்றொன்றை வரலாற்று சின்னமாக தொல்லியல் துறை பாதுகாத்து வருகிறது. 14ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டியன் கல்வெட்டுகள், கி.பி.1605ல் விஜயநகரை ஆண்ட மன்னர் சதாசிவராஜயர் காலத்து கல்வெட்டுகள் உள்ளன. கோயிலுக்கு நிலம் தானம் கொடுத்ததை பராக்கிரமபாண்டியன் கல்வெட்டும், அருவியூர் நகரத்துப்பூண்டி உடையான் அம்மனுக்கு கோயில் எழுப்பியதை சதாசிவராயர் கல்வெட்டும் தெரிவிக்கிறது, என்றார்.