பதிவு செய்த நாள்
14
அக்
2013
01:10
ஸ்ரீபெரும்புதூர்: பாடிச்சேரியில், சாய்விட்டலா பக்த சமாஜம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ குபேர பிரேமசாய் ஜகன்மாதா மந்தீர் கோவில் கட்டுமானப்பணிக்கான பூமிபுஜை மற்றும் சாய்பாபா மகாசமாதி தின விழா நடைப்பெற்றது. ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ளது பாடிச்சேரி. இக்கிராமம், வடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீ சாய்விட்டலா பக்த சமாஜம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ குபேர பிரமசாய் ஜகன்மாதா மந்தீர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காலை 7 மணிக்கு, கணபதி ஹொமமும், அதனைத்தொடர்ந்துபூமி புஜைக்கான யாகம் வளர்க்கப்பட்டது. காலை 9:10 மணிக்கு, பூமிபுஜை போடப்பட்டது. சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்ற பின், பூமி புஜைக்கான செங்கற்கல், அதற்கென வெட்டப்பட்ட, பள்ளத்தில் வைத்து சிறப்பு புஜை நடைப்பெற்றது. அதனைத்தொடர்ந்து, 9:15 மணி முதல் சாய் பக்தர்கள் சார்பில், சாய் பஜனையும், பகல் 12:00 மணிக்கு மகா ஆரத்தி நடைபெற்றது. பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு, சாய்பாபாவை வழிப்பட்டனர். பிற்பகல் 2.20 மணிக்கு, குபேர சாய் விளக்கு ஜோதி தரிசனம் நடந்தது. இதுகுறித்து, ஸ்ரீ சாய்விட்டலா பக்த சமாஜம் டிரஸ்டி நிர்வாகி கூறுகையில், "வடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாடிச்சேரியில், சாய்பக்தர் நன்கொடையாக வழங்கிய, இடத்தில் 10 லட்சம் மதிப்பில், ஸ்ரீகுபேர பிரேமசாய் ஜகன்மாதா மந்தீர் ஆலயம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று பூமிபுஜை நடந்தது. விரைவில் கட்டுமானப்பணிகள் தொடங்கும் என்றார்.