பதிவு செய்த நாள்
16
அக்
2013
11:10
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து, உற்சவர் பெருமான், விஜயதசமி தினத்தை முன்னிட்டு, நகர வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன், மலைப்படிகள் வழியாக, திருக்குளம், ம.பொ.சி., சாலை, கந்தசாமி தெரு வழியாக, எம்.ஜி.ஆர்., தெருவில் உள்ள, குளக்கரை மண்டபத்திற்கு வந்தடைந்தார். பின்னர், உற்சவருக்கு பால், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, இரவு, 8:00 மணிக்கு, உற்சவர், முக்கிய வீதிகளில், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 9:00 மணிக்கு, உற்சவர், மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார்.